பாகற்காய் எளிய முறையில் லாபம் பார்க்கலாம்


பாகற்காய் எளிய முறையில் லாபம் பார்க்கலாம் laabamm



• பாகற்காய் செலவுகளை எப்படி குறைப்பது 


1. இரண்டு முறை ரொடேட்டர் மூலம் உழுதால் மட்டும் போதும்

2. 7 அடிக்கு ஒரு பார் உழுதல் வேண்டும்

3. ஒரு முறை மட்டுமே விதைகளை கடைகளில் வாங்க வேண்டும் பிறகு பழம் பழுத்த பிறகு அதிலிருந்து விதைகளை நாமே நேர்த்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

4. விதைகளை ஓர் நாள் இரவு மட்டும் ஊற வைத்து நட வேண்டும் சீக்கிரம் முளைப்பு திறன் அதிகரிக்க.

5. பந்தல் அமைக்க நமது காட்டில் உள்ள மரங்களை வெட்டி 7 அடி மரங்களாக 10 அடிக்கு ஒரு மரம் விதம் நேராக நடவும்

6. துணி காயவைக்கும் ஸ்டே ஒயர் கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் மூலம் இன்சுலேட் செய்யப்பட்டுள்ள ஒயர் விலை குறைவு அதனை வாங்கவும்


7. ஒவ்வொரு பார்ருக்கும் நேர் நேராக எழுத்து மரங்களில் கட்டி கீழே இரண்டு புறமும் மரத்தை கூர்மையாக வெட்டி அதில் இருபுறமும் ஒயரை கட்டி பூமியில் அடிக்க வேண்டும் நல்ல இறுக்கமாக இருக்க வேண்டும்

பாகற்காய் எளிய முறையில் லாபம் பார்க்கலாம் laabamm



8. பிறகு வீடுகளில் பழைய புடவை இருந்தால் அதனை சிறிது சிறிதாக கிழித்து வைத்துக் கொள்ள வேண்டும் சணலுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கொடி  ஒரு மீட்டர் வளர்ந்த பிறகு கம்பியில் இழுத்து கட்ட வேண்டும்

9. கொடி  கம்மி மேல் நல்ல படர ஆரம்பித்த பிறகு நோய்கள் தாக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்

10. நோய்கள் தாக்கி விட்டால் புழுக்கள் இருந்தால் பச்சை மிளகாய் ஒரு கிலோ வேப்பிலை இலை ஒரு கிலோ எருக்கன் இலை ஒரு கிலோ இந்த மூன்றையும் அரைத்து சாறு எடுத்து அதை 10 லிட்டர் டேங்கில் 200 ml விதம் தெளித்து வர வேண்டும் புழுக்கள் இறந்து விடும் கொடியியும் நங்கு படரும்

11. காய்கள் நன்கு காய்க்கும் போது அதிகமாக முத்தாமல் முக்கால் பங்கு முத்திய உடன் பறிக்க வேண்டும்

12. நல்ல காய்களை மட்டும் உழவர் சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும்



நன்றி


Laabamm.bolgspot.com